Published Date: June 21, 2025
CATEGORY: CONSTITUENCY

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் ரூபாய் 9.85 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகளை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதிமூலம் பிள்ளை, அக்ரஹாரம், ராஜா மில் காம்பவுண்ட் நடுத்தெரு, மேல பொன்னகரம்மெயின் ரோடு, புது ஜெயில் ரோடு, தாமஸ் காலனி காவல் நிலைய ரோடு, அம்பேத்கர் காலனி சுப்ரமணியபுரம் முதல் மெயின் ரோடு, லட்சுமிபுரம் எல். எ.ல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய் 9 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை மற்றும் பேவர் பிளாக் அமைப்பதற்கான பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்.
இதில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, முன்னாள் துணை மேயர் மிசாபாண்டியன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
Media: Tamil Murasu